TNPSC Thervupettagam

வைப்புத் தொகை குறியாக்கம்

October 9 , 2025 4 days 22 0
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது வைப்புத் தொகை குறியாக்கம் குறித்த ஒரு சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • வைப்புத் தொகை குறியாக்கம் என்பது வங்கிகளில் வைத்திருக்கும் வைப்புத் தொகைகளை அனைத்து அமைப்புகளிலும் பயன்படுத்தப்படக் கூடிய, மாற்றப்படக் கூடிய அல்லது மிகவும் சீரான முறையில் தீர்க்கப்படக் கூடிய வகையில் குறியீடு கொண்டு குறிப்பிடுவதாகும்.
  • ஒரு வாடிக்கையாளர் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சொத்தை நம்பகமான காப்பு வங்கியிடம் வைப்பு வைக்கும் போது இந்த செயல்முறை தொடங்குகிறது.
  • அதற்கு ஈடாக, காப்பு வங்கி ஒரு தொடர் சங்கிலித் தொழில்நுட்ப வலையமைப்பில் அதற்கு ஈடான மதிப்பிலான டிஜிட்டல் குறியீடுகளை வழங்குகிறது.
  • டிஜிட்டல் குறியாக்கம் என்பது வைப்புத் தொகை, பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற சொத்துக்களை தொடர் சங்கிலி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் வடிவங்களாக மாற்றும் செயல்முறையைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்