TNPSC Thervupettagam

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு

May 8 , 2024 12 days 89 0
  • ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பாக சீனாவின் மீது இந்தியா வலுவான புகார் அளித்துள்ளது.
  • இது கள நிலவரத்தை மாற்றுவதற்கான ஒரு "சட்டவிரோத" முயற்சியாக விவரிக்கப் படுகிறது.
  • ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு, உத்திசார் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள, தற்போது பாகிஸ்தான் நாட்டினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் (PoK) ஓர் அங்கமாக விளங்கும் ஒரு பகுதியாகும்.
  • ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு அல்லது டிரான்ஸ் காரகோரம் பாதையானது, PoK பகுதியின் ஹன்சா-கில்கிட் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.
  • இதன் வடக்குப் பகுதி சீன மக்கள் குடியரசின் சின்ஜியாங் மாகாணத்தினால் சூழப் பட்டுள்ளது.
  • PoK பகுதியின் வடக்குப் பகுதிகள் அதன் மேற்கு மற்றும் தெற்கிலும், சியாச்சின் பனிப்பாறை பகுதி கிழக்கிலும் உள்ளன.
  • 1963 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் தனது எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பெய்ஜிங்குடன் ஒரு எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து, ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கைச் சீனாவிற்கு வழங்கியது.
  • 1963 ஆம் ஆண்டின் சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தினை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை என்ற நிலையில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தப் பகுதியை பாகிஸ்தான் சீனாவிற்கு சட்டவிரோதமான முறையில் வழங்க முயன்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்