மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகமானது ஷரம் சக்தி எனப்படும் ஒரு தேசிய புலம்பெயர் உதவித் தளத்தைத் தொடங்கியுள்ளது.
இது புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வேண்டி மாநில மற்றும் தேசிய அளவிலான திட்டங்களின் சுமூகமான அமலாக்கத்திற்கு திறனுள்ள வகையில் உதவ இருக்கின்றது.
பழங்குடியின புலம்பெயர்ந்தோர் குறித்த மாநில அளவிலான தரவை மைய அளவில் இணைக்கும் வகையில் மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகம் செயல்படுவது இதுவே முதன்முறையாகும்.
இது அவர்களின் எண்ணிக்கைக்காக மட்டும் அல்லாமல் அவர்களை அந்தத் திட்டங்களுடன் இணைப்பதற்காகவும் அறியப்படுகின்றது.
கோவா ஆனது தனது புதிய புலம்பெயர்வுப் பிரிவின் மூலம் தரவுச் சேகரிப்பு குறித்த துறைச் சோதனையில் முன்னணியில் உள்ளது.