மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பள்ளிக் கல்விக்கான உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்நேர இணைப்புகளில் ஒன்றாக கருதப்படும் ஷாகுன் என்ற இணைய வாயிலை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.
இது பள்ளிக் கல்வி அமைப்பை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
இந்த இணைய வாயில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து நிகழ்நேர இணைய வாயில்களையும் இணைய தளங்களையும் இணைக்கும் ஒரு இணைப்பாகும்.
இந்த இணைய வாயில் ஏறக்குறைய 92 லட்சம் ஆசிரியர்களையும் 26 கோடி மாணவர்களையும் இணைத்திட எண்ணுகின்றது.