ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினுடைய உறுப்பினர் நாடுகளின் தகுதி வாய்ந்த அதிகாரிகளின் எல்லைப் பணிகளின் தலைவர்களின் 8வது சந்திப்பினை இந்தியா புது தில்லியில் நடத்தியது.
இந்தச் சந்திப்பில் இந்தியா உட்பட, அந்த அமைப்பின் மற்ற 7 உறுப்பினர்கள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் நிர்வாகக் குழு ஆகியவை கலந்து கொண்டது.
இதில் "நட்புறவு எல்லை - 2022" என்ற இந்த ஆண்டிற்கான ஒரு கூட்டு எல்லைசார் நடவடிக்கையின் தயார்நிலை மற்றும் ஏற்பாடுகளுக்கான திட்டமானது மதிப்பாய்வு செய்யப் பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
சீனாவின் ஒரு கூட்டு எல்லை நடவடிக்கை முன்மொழிவான "ஒற்றுமை - 2023" இதில் அங்கீகரிக்கப் பட்டது.