ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர்
January 10 , 2022
1268 days
620
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக சீனாவின் மூத்த அரசு முறை அதிகாரி சாங் மிங் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.
- அவர் சமீப காலம் வரையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீனத் தூதராக இருந்தார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது எட்டு உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கியது.
- அவை இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ் குடியரசு, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகும்.
- 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற அஸ்தானா உச்சி மாநாட்டில் இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்தது.

Post Views:
620