TNPSC Thervupettagam

ஷாம்லத் நில விற்பனை – பஞ்சாப்

September 2 , 2025 20 days 49 0
  • மொஹாலி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்கங்கள் மற்றும் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் பொது (ஷாம்லத்) நிலத்தை ஏலம் விடுவதற்கான நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்தனர்.
  • ஜமீன் பச்சாவ், பிண்ட் பச்சாவ் (நிலத்தைக் காத்து, கிராமங்களைக் காத்தல்) குழுவின் தொடக்கத்தையும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்தது.
  • ஷாம்லத் நிலம் என்பது கிராமப் பஞ்சாயத்துகள் கூட்டாக இணைந்து, நிர்வகிக்கும் கிராம பொது நிலத்தைக் குறிக்கிறது.
  • அவை வரலாற்று ரீதியாக மேய்ச்சல், சமூக இடங்கள் அல்லது கூட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
  • வருவாய்ப் பதிவுகளில் ஷாம்லத் தே, ஷாம்லத் டிக்காஸ் என விவரிக்கப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் பொதுவான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பிற ஒத்த வகைப்பாடுகள் இதில் அடங்கும்.
  • கிராமப் பஞ்சாயத்தில் உள்ள ஷாம்லத் தே நிலங்கள் முன்னர் தனிநபர்கள் கொண்டிருக்கும் எந்தவொரு தனியுரிமை உரிமைகளையும் நீக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்