காஷ்மீரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காஷ்மீரில் அரிசி-கோதுமை பயிர் முறைக்காக இரண்டு புதிய குறைந்த காலத்தில் முதிர்ச்சியடையும் கோதுமை வகைகளை உருவாக்கினர்.
இந்த வகைகள் சுமார் 1,850 மீட்டர் வரையிலான நடுத்தர உயரப் பகுதிகளுக்கு ஏற்றவை.
கோதுமையில் ஏற்படும் முக்கியமானப் பூஞ்சை நோயான yellow rust நோயினை இவை எதிர்க்கின்றன.
ஷாலிமார் கோதுமை-3 ஒரு ஹெக்டேருக்கு 38 குவிண்டால் வரை உற்பத்தி செய்கிறது என்பதோடுமேலும் இவை அதிக இரும்பு, துத்தநாகம் மற்றும் சுமார் 12% புரதத்தைக் கொண்டுள்ளது.