ஷின்யு மைத்ரி 2019: இந்தோ - ஜப்பான் இராணுவப் பயிற்சி
October 18 , 2019 2255 days 821 0
இந்திய விமானப் படையானது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வரை ஜப்பானிய விமானத் தற்காப்புப் படையுடன் (Japanese Air Self Defence Force - JASDF) ‘ஷின்யு மைத்ரி’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சியானது மேற்கு வங்கத்தின் பனகர் நகரில் உள்ள அர்ஜன் சிங் விமானப் படை நிலையத்தில் நடைபெற இருக்கின்றது.
அதே நாடுகளின் ‘படைகளுக்கு’ இடையிலான மற்றொரு பயிற்சியானது கிழக்குக் பிராந்தியத்தில் நடைபெற இருக்கின்றது.
IAFன் (இந்திய விமானப் படை) சிறப்பு நடவடிக்கைப் படையின் C-130 J என்ற விமானம் மற்றும் JASDF இன் தந்திரோபாய விமானப் படைகளின் C-130 H என்ற விமானம் ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்க இருக்கின்றன.
இதுபோன்ற முதலாவது இருதரப்பு இராணுவப் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டில் ஆக்ராவின் விமானப் படை நிலையத்தில் நடத்தப் பட்டது.