TNPSC Thervupettagam
August 8 , 2025 7 days 51 0
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) இணை நிறுவனருமான ஷிபு சோரன் காலமானார்.
  • டிஷோம் குரு அல்லது குருஜி என்று அழைக்கப்படும் இவர், ஜார்க்கண்ட் மாநில உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார், மேலும் பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆதரவாளராகவும் இருந்தார்.
  • சோரன் மூன்று முறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
  • தும்கா தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக பல முறை தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 2004 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 24 ஆம் தேதி வரை; 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் தேதி வரை; மற்றும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை மத்திய நிலக்கரி அமைச்சராகப் பணியாற்றினார்.
  • 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்