ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) இணை நிறுவனருமான ஷிபு சோரன் காலமானார்.
டிஷோம் குரு அல்லது குருஜி என்று அழைக்கப்படும் இவர், ஜார்க்கண்ட் மாநில உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார், மேலும் பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆதரவாளராகவும் இருந்தார்.
சோரன் மூன்று முறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
தும்கா தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக பல முறை தேர்ந்தெடுக்கப் பட்டார்.
2004 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 24 ஆம் தேதி வரை; 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் தேதி வரை; மற்றும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை மத்திய நிலக்கரி அமைச்சராகப் பணியாற்றினார்.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.