TNPSC Thervupettagam

ஷென்சென் பிரகடனம்

November 25 , 2026 13 hrs 0 min 17 0
  • சீனாவில் நடைபெற்ற 33-வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் போது, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களது முதலாவது முத்தரப்பு உச்சி மாநாட்டிற்குப் பிறகு நான்கு அம்ச ஷென்சென் (Shenzhen) பிரகடனத்தை வெளியிட்டன.
  • இது உலகளாவிய அமைதி மற்றும் உத்திசார் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தாத கூட்டு அரசியல் அறிக்கையாகும்.
  • அணு ஆயுத அபாயங்களைக் குறைக்கவும், அணு ஆயுதப் பரவலைத் தடுக்கவும் மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டன.
  • சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உட்பட நிலையான உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பராமரிக்க அவை உறுதியளித்தன.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) மூன்று நிரந்தர உறுப்பினர்களும் ஐக்கிய நாடுகள் சபை சீர்திருத்தங்களை நோக்கிப் பணியாற்ற ஒப்புக் கொண்டனர்.
  • இந்தப் பிரகடனம் அரசின் ஒப்புதல், இறையாண்மை விலக்குரிமை மற்றும் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
  • 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான புதிய உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (New START) காலாவதியானதைத் தொடர்ந்து இது வெளியிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்