மேற்கு வங்காள அரசானது, "ஷ்ரம்ஸ்ரீ" திட்டம் என்ற புதிய மறுவாழ்வு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது வங்காள மொழி பேசுவதற்காக பிற மாநிலங்களில் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு காட்டப்பட்டு, பின்னர் சொந்த மாநிலத்திற்குத் திரும்பும் வங்காளப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை இலக்காகக் கொண்டது.
ஷ்ரம்ஸ்ரீ திட்டத்தின் கீழ், திரும்பும் ஒவ்வொரு தொழிலாளியும் ஓராண்டிற்கு அல்லது வங்காளத்தில் புதிய வேலைவாய்ப்பைப் பெறும் வரையில் மாதத்திற்கு 5,000 ரூபாய் உதவித் தொகை பெறுவார்கள்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இருபத்தி இரண்டு லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் பணிபுரிகின்றனர்.