கடந்த ஆண்டில் சுமார் 12 லட்சம் மத்திய அரசு மின்னஞ்சல் கணக்குகள் தேசிய தகவல் மைய (NIC) தளத்திலிருந்து ஸோஹோவின் தளத்திற்கு மாற்றப் பட்டன.
இந்த நடவடிக்கையானது, ஊழியர்கள் பொது வெளி மூலக் கருவிகளைப் பயன்படுத்துவதை தடுப்பதையும், உள்நாட்டு மென்பொருளைப் பயன்படுத்தி தரவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
மின்னஞ்சல் தளங்களின் பெயர்கள் "gov.in" மற்றும் "nic.in" என மாறாமல் இருந்தன, ஆனால் பின்தள ஏற்பு அமைப்புகள் மற்றும் செயலாக்கம் ஆனது ஜோஹோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.
மின்னஞ்சல் மற்றும் அலுவலக உற்பத்தித் திறன் சேவைகளை கையாள்வதற்காக 2023 ஆம் ஆண்டில் ஸோஹோ நிறுவனத்திற்கு ஏழு ஆண்டு கால ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்த முன்னெடுப்பானது, குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் டெல்லியில் உள்ள AIIMS நிறுவனத்தில் நடைபெற்ற இணையவெளித் தாக்குதலுக்குப் பிறகு இணையவெளிப் பாதுகாப்பு சார்ந்த கவலைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக மேற்கொள்ளப் பட்டது.
ஸோஹோவிற்கான அமைச்சர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் இடம்பெயர்வு ஆனது தன்னார்வ அடிப்படையில் செய்யப் பட்டது அதே நேரத்தில் அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்பானது NIC தளத்தின் கீழ் தொடர்கிறது.