ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பலின் நீண்டதூரப் பயணம்
August 25 , 2023 736 days 373 0
ஐஎன்எஸ் வகிர் எனப்படும் இந்தியாவின் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் ஆனது, கிட்டத்தட்ட 7,000 கி.மீ. அல்லது 4,000 கடல் மைல்களைக் கடந்து ஆஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்தது.
இந்தியாவின் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பலின் முதன்முறையான மற்றும் மிக நீண்ட தூரப் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணமானது ஆஸ்திரேலிய நாட்டுக் கடற்படையுடனான கடலுக்கடியில் மேற் கொள்ளப் படும் பயிற்சிகளில் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டது.
ஐஎன்எஸ் வகிர் கப்பலானது ஐந்தாவது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.