‘ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின்’ (Stand Up India Scheme) கால அளவை 2025 ஆம் ஆண்டு வரை இந்திய அரசு நீட்டித்துள்ளது.
இது பட்டியல் இனத்தோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கடன் வழங்கச் செய்வதற்கும், அவர்களிடையேத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கச் செய்வதற்கும் வேண்டி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமரால் தொடங்கப் பட்டது.
'கிரீன்ஃபீல்ட் நிறுவனத்தை' (greenfield enterprise) அமைப்பதில் அவர்களை ஊக்குவிக்கச் செய்வதற்காக இந்தத் திட்டம் வங்கிக் கடன்களை வழங்குகிறது.
இங்கே கிரீன்ஃபீல்ட் என்பது பண்ணைத் துறை அல்லாமல் உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறை என்று மட்டுமே பொருள்படும்.