TNPSC Thervupettagam

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் நீட்டிப்பு

November 18 , 2026 2 days 73 0
  • பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரைச் (ST) சேர்ந்த கூடுதலாக 2.5 லட்சம் தொழில்முனைவோரை இலக்காகக் கொண்டு, ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தை 2031 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதை ஆதரிப்பதற்காக ₹4,111 கோடி மதிப்பிலான கடன் உத்தரவாத நிதியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், இதுவரை 2.75 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினத் தொழில்முனைவோருக்குக் கடன்களை வழங்கியுள்ளது.
  • இது உற்பத்தி, சேவைகள், வர்த்தகம் மற்றும் விவசாயம் சார்ந்த செயல்பாடுகளில் புதிய (பசுமைக்கள) நிறுவனங்களை அமைப்பதற்காக, திட்டச் செலவில் 85% வரை உள்ளடக்கும் வகையில் ₹10 லட்சத்திற்கு மேல் ₹1 கோடி வரை கடன்களை வழங்குகிறது.
  • இத்திட்டம் கடன் தொகையில் 85% கடன் உத்தரவாதக் காப்பீட்டை 0.50% நிலையான உத்தரவாதக் கட்டணத்துடன் வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்