TNPSC Thervupettagam

ஸ்டார்ட்அப் இந்தியா நிதியங்களுக்கான நிதி 2.0

April 16 , 2026 2 days 63 0
  • ₹10,000 கோடி நிதியுடன் ஸ்டார்ட்அப் இந்தியா நிதியங்களுக்கான நிதி (FoF) 2.0 திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • இது மூலதனத்தைத் திரட்டுவதையும், குறிப்பாக தனியார் முதலீடு குறைவாக உள்ள துறைகளில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2016 ஆம் ஆண்டு ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியங்களுக்கான நிதி (FFS) 1.0 இன் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்த நிதியானது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) பதிவு செய்யப்பட்ட மாற்று முதலீட்டு நிதிகளில் (AIFs) முதலீடு செய்யப்படும்.
  • இத்திட்டத்தை இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) செயல்படுத்தும்.
  • இது அதிநவீன தொழில்நுட்பம், ஆரம்ப கட்டப் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமையான உற்பத்தித் துறைகளில் முக்கிய கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்