ஸ்டாலினியவாதம் மற்றும் நாசிசம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதற்கான ஐரோப்பிய தினம் – ஆகஸ்ட் 23
August 25 , 2021 1584 days 474 0
இத்தினமானது சில நாடுகளில் கருப்புப் பட்டை தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
இது சர்வாதிகார ஆட்சியினால் குறிப்பாக ஸ்டானிய வாதம், வகுப்புவாதம், நாசிசம் மற்றும் பாசிசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான ஒரு சர்வதேச தினமாகும்.
இது “தீவிரவாதம், சகிப்புத் தன்மை மற்றும் ஒடுக்குமுறை” ஆகியவை நிராகரிக்கப் படுவதைக் குறிக்கிறது.
இத்தினமானது 2009 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுசரிக்கப் பட்டு வருகிறது.
மோலோடோவ் – ரிப்பன்ரோப் என்ற ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான தேதியுடன் ஒன்றிணையும் வகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
மோலோடோவ் – ரிப்பன்ரோப் ஒப்பந்தமானது 1939 ஆம் ஆண்டில் USSR மற்றும் நாஜி ஜெர்மனி இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு இல்லாத ஒப்பந்தமாகும்.