ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி "உலகின் முதல்" அறுவைசிகிச்சை
December 28 , 2022 1088 days 539 0
இங்கிலாந்தில் உள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணர், நஞ்சுக் கொடியிலிருந்து ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி "உலகிலேயே முதல்" அறுவை சிகிச்சையை மேற் கொண்டுள்ளார்.
ஸ்டெம் செல்கள் என்பவை உடலின் மூலப்பொருட்கள் ஆகும்.
இவை சில சிறப்புச் செயல்பாடுகளைக் கொண்ட மற்ற அனைத்துச் செல்களையும் உருவாக்கும் செல்கள் ஆகும்.
உடல் அல்லது ஆய்வகத்தில் ஒரு சரியான சூழ்நிலையில், ஸ்டெம் செல்கள் பிரிக்கப் பட்டு சேய் செல்கள் எனப்படும் அதிக செல்கள் உருவாக்கப்படுகின்றன.