ஸ்டெர்லைட் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 2024
March 3 , 2024 686 days 791 0
உச்ச நீதிமன்றம் ஆனது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவை பிப்ரவரி 29 ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சுற்றுச்சூழல் விதி மீறல்களை ஏற்படுத்துகிறது என்ற காரணத்திற்காக அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற மாநில அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அறிவித்த முடிவை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது.
தாமிரபரணி நதிக்கரையை ஒட்டியமைந்த தனியார் நிலங்கள் உட்பட 11 இடங்களில் வகைத் தொகையற்ற தாமிரக் கசடுகளை கொட்டியது உட்பட ஆலையில் மீண்டும் மீண்டும் பல விதி மீறல்கள் நடைபெற்றன.
ஆலையின் ஒரு பகுதியில் அபாயகரமான கழிவுகளை கொட்டுவதற்கான அங்கீகாரம் பெறுவதில் தோல்வி ஏற்பட்டது.
இருப்பினும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது தனது கடமைகளை நிறைவேற்றச் செய்வதில் அலட்சியம் காட்டியுள்ளது என்று உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.