TNPSC Thervupettagam

ஸ்டேப்கார் - 2018 (STAPCOR)

October 29 , 2018 2458 days 744 0
  • லட்சத் தீவு யூனியன் பிரதேசத்தின் பங்காராம் தீவில் பவளப் பாறைகளின் நிலை மற்றும் பாதுகாப்பு மீதான சர்வதேசக் கருத்தரங்கு (STAPCOR - 2018) நடத்தப் பட்டது.
  • இக்கருத்தரங்கின் கருத்துருவானது, “வாழ்க்கைக்கான பாறைகள்” என்பதாகும்.
  • இந்தக் கருத்தரங்கானது
    • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MOEFCC)
    • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (IUCN)
    • சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு

ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்தின் (ZSI-Zoological Survey of India) தொழில்நுட்ப உதவியுடன் லட்சத் தீவு யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை ஆகியவற்றால் கூட்டாக இணைந்து நடத்தப்பட்டது.

  • மேலும் இது 2018 ஆம் ஆண்டை சர்வதேசப் பவளப்பாறை ஆண்டின் மூன்றாவது பத்தாண்டுகளாக அறிவிக்கப்பட்டதுடன் ஒன்றிப் பொருந்துகிறது.
  • 2018 ஆம் ஆண்டை சர்வதேசப் பவளப்பாறைகளுக்கான ஆண்டாக சர்வதேசப் பவளப் பாறைகள் முன்னெடுப்பு (ICRI - International Coral Reef Initiative) அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்