ஸ்பதாஸ்பினா நூஹி என்று பெயரிடப்பட்ட ஒரு பூச்சி இனமானது, மேகாலயாவின் காடுகளில் கண்டறியப்பட்ட அந்துப்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்தது.
இது ஒரு புதிய இனமாக அடையாளம் கண்டறியப்பட்டது மட்டுமல்லாமல், முற்றிலும் புதிய இனத்தின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சார் சுற்றுலா மற்றும் நிலையான மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்கான அவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, கேரள மாநில அரசின் சுற்றுலா துறை இயக்குநரான P.B. நூஹ் எனும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியைக் கௌரவிக்கும் வகையில் இந்தப் பெயர் வழங்கப்படுகிறது.
இவை உலகளவில் அறியப்பட்ட 60,000க்கும் மேற்பட்ட உயிரினங்களை உள்ளடக்கிய பெரிய வண்டு குடும்பமான குர்குலியோனிடேயின் ஒரு பகுதியாகும்.