இந்திய விமானப் படை 100ற்கும் மேற்பட்ட ஸ்பைஸ் (SPICE) குண்டுகளை வாங்குவதற்காக இஸ்ரேல் அரசாங்கத்துடன் ரூ. 300 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ஸ்பைஸ் என்பது “திறன் வாய்ந்த, துல்லியமான தாக்கம் கொண்ட, செலவு குறைந்த குண்டு” என்பதன் விரிவாக்கம் ஆகும்.
இதன் வரம்பு 60 கிலோ மீட்டர் ஆகும்.
இது வானிலிருந்து நிலத்தை நோக்கிப் பாயும் நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படை பாலகோட் விமானத் தாக்குதலில், இந்தக் குண்டின் ஸ்பைஸ் 2000 என்ற வகையைப் பயன்படுத்தியது.