உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது, பொது விநியோக அமைப்பில் தொழில் நுட்பத்தின் மூலம் நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான திட்டத்தினை (SMART-PDS) முன்மொழிந்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளை SMART-PDS திட்டத்தினைச் செயல்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
செயல்பாடு மற்றும் அமலாக்கம் ஆகியவற்றினைத் தரநிலையாக்குவதற்காக பொது விநியோகத் திட்டத்தின் தகவல் தொழில்நுட்பத்தினை மாற்றியமைப்பதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
SMART-PDS திட்டம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை ஆகும்.
இருப்பினும், மின்னணு அட்டைகளை வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பாகும்.