ஐரோப்பிய விண்வெளி முகமையும் (ESA) சீன அறிவியல் அகாடமியும் (CAS) தங்களின் முதலாவது முழுமையான கூட்டு விண்வெளித் திட்டமான ஸ்மைல் (SMILE - சூரியக் காற்று, காந்தக்கோளம் மற்றும் அயனக்கோள இணைப்பு ஆய்வி) திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
சூரியக் காற்றுக்கும் பூமியின் காந்த மண்டலத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதற்காக, விண்வெளியில் இயங்கும் உலகின் முதல் மென் எக்ஸ்-கதிர் படமெடுக்கும் கருவியை (SXI) இத்திட்டம் கொண்டுள்ளது.
சூரியச் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை நிகழ்வுகளின் போது பூமியின் காந்தக் கவசத்தின் உலகளாவிய எக்ஸ்-ரே மற்றும் புற ஊதா கதிரின் படங்களை எடுப்பதை ஸ்மைல் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தில் மென் எக்ஸ்-கதிர் படமெடுக்கும் கருவி (SXI), புற ஊதாக் கதிர் துருவ ஒளிப் படமெடுக்கும் கருவி (UVI), லேசான அயனிப் பகுப்பாய்வி (LIA) மற்றும் காந்தமானி (MAG) ஆகிய நான்கு அறிவியல் கருவிகள் இடம்பெற்றுள்ளன.
2,600 கிலோ எடையுள்ள இந்தச் செயற்கைக்கோள் பூமியின் வட துருவத்திற்கு மேலே சுமார் 1.21 லட்சம் கிமீ தொலைவில் உள்ள அதிக நீள்வட்டப் பாதையில் இயங்கும்.
இந்தத் திட்டம் விண்வெளி வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தவும், செயற்கைக் கோள்கள், புவியியல் தகவல் அமைப்பு (GPS), மின் கட்டமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சூரிய புயல்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.