ஸ்ரீ ஜெய தேவ் ராஸ்டிரிய யுவ பிரதிப புரஸ்கார் விருது
May 22 , 2018 2608 days 957 0
அமெரிக்காவைச் சேர்ந்த கதக் நடனக் கலைஞரான (Kathak dancer) அனின்திதா அன்னமிற்கு (Anindita Anaam) கதக் நடனத் துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக 2018 ஆம் ஆண்டின் ஸ்ரீ ஜெய தேவ் ராஸ்டிரிய யுவ பிரதிப புரஸ்கார் விருது (Shri Jayadev Rastriya Yuva Pratibha Puraskar 2018) வழங்கப்பட்டுள்ளது.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற ஜெய தேவ சர்வதேச நடனத் திருவிழாவின் (Jayadev International Dance Festival) போது ஸ்ரீ ஜெயதேவ் ராஸ்டிரிய யுவ பிரதிப புரஸ்கார் விருது அனின்திதா அன்னமிற்கு வழங்கப்பட்டது.
ஒடிஸா மாநில அரசின் கலாச்சாரத் துறையால் தேசிய கலாச்சாரத் திட்டத்தின் (National Culture Mission) கீழ் இந்த நான்கு நாள் திருவிழா புவனேஸ்வரில் நடைபெற்றது.