மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் புதுதில்லியில் தொழில்பழகுநர் மற்றும் திறன்களில் இளைஞர்களின் உயர்கல்விக்கான திட்டம் என்ற ஒன்றைத் துவக்கி இருக்கின்றார்.
இது தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை முடிக்கும் பொதுவான பட்டதாரிகளுக்கு தொழிற்சாலை பழகுநர் வாய்ப்புகளை ஏற்படுத்தத் திட்டமிட இருக்கின்றது.
ஸ்ரேயாஸ் (Scheme for Higher Education Youth in Apprenticeship and Skills - SHREYAS) என்பது மூன்று மத்திய அமைச்சகங்களின் முன்னெடுப்புகளை உள்ளடக்கிய ஒரு திட்டத் தொகுப்பு ஆகும். அவையாவன :
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் (தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம்)
ஸ்ரேயாஸ் இணையவாயில் கல்வி நிறுவனங்களையும் தொழிற்துறையையும் இணைய தளத்தில் பதிவு செய்து தங்கள் துறை சார்ந்த தொழிற்பழகுநருக்கான தேவைகளையும் விநியோகத்தையும் வெளிப்படுத்திட இயலச் செய்யும்.
இந்த விதிகளுடன் பொருந்திப் போகும் மாணவர்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட தகுதி விதிமுறைகளின் படி தொழிற்பழகுநர் துறைகளைத் தேர்ந்தெடுக்கச் செய்வர்.