‘ஸ்வச் அம்ரித் மஹோத்சவ்’ என்ற நிகழ்ச்சியின் போது இந்தியாவின் தூய்மையான 342 நகரங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் விருதுகளை வழங்கினார்.
இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ஸ்வச் பாரத் மிஷன் - நகர்ப்புறம் 2.0 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சுமார் 4320 நகரங்களில் கணக்கெடுப்பு மேற்கொண்டதன் மூலம் உலகின் ஒரு மிகப் பெரிய தூய்மை நிலைக் கணக்கெடுப்பாக இது மாறியுள்ளது.
1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் இந்தூர் நகரம் தொடர்ந்து 5வது ஆண்டாக ‘தூய்மையான நகரம்’ என்ற விருதினைப்பெற்று உள்ளது.
அதைத் தொடர்ந்து சூரத் மற்றும் விஜயவாடா ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.
வாரணாசி 'சிறந்த கங்கை நகரம்' என்ற விருதையும் அகமதாபாத் இராணுவக் குடியிருப்புப் பகுதி 'இந்தியாவின் தூய்மையான இராணுவக் குடியிருப்புப் பகுதி' என்ற விருதையும் வென்றுள்ளன.
100க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கொண்ட மாநிலங்கள் பிரிவில் சத்தீஸ்கர் தொடர்ந்து 3வது ஆண்டாக இந்தியாவின் ‘தூய்மையான மாநிலம்’ என்ற விருதைப் பெற்றுள்ளது.
‘100க்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கொண்ட மாநிலங்கள்’ என்ற பிரிவில் ஜார்க்கண்ட் இரண்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான மாநிலம்’ என்ற விருதை வென்றது.
‘100க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கொண்ட மாநிலங்கள்’ பிரிவில் ‘வேகமாக இயங்கி வரும் மாநிலமாக’ கர்நாடக மாநிலம் உருவெடுத்துள்ளது.
‘100க்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கொண்ட மாநிலங்கள்' என்ற பிரிவில் ‘வேகமாக இயங்கி வரும் மாநிலமாக’ மிசோரம் மாநிலம் உருவெடுத்துள்ளது.
இதில் மகாராஷ்டிரா 92 விருதுகளையும், சத்தீஸ்கர் 67 விருதுகளையும் பெற்றுள்ளன.