வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது (MoHUA) ஸ்வச் டாய்கேத்தான் என்ற போட்டியைத் தொடங்கியுள்ளது.
MyGov என்ற தளத்தின் இன்னோவேட் இந்தியா என்ற இணையதளத்தில் இந்தப் போட்டியானது நடத்தப்பட உள்ளது.
ஸ்வச் டாய்கேத்தான் என்பது பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் (NAPT) 2020 மற்றும் சுவச் பாரத் திட்டம் (SBM) 2.0 ஆகியவற்றினால் ஒருங்கிணைந்து மேற் கொள்ளப் பட்ட முயற்சியாகும்.
இது பொம்மைகளின் தயாரிப்பில் கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு தீர்வுகளை ஆராய முயல்கிறது.
உலர் கழிவுகளைப் பயன்படுத்திப் பொம்மை வடிவமைப்புகளில் புதுமைகளைக் கொண்டு வருவதற்காக, தனிநபர்கள் மற்றும் பல்வேறு குழுக்களுக்கு இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது.
இந்த முன்னெடுப்பிற்குப் படைப்பாற்றல் சார்ந்த கற்றல் மையம் (இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம்-காந்திநகர்) அறிவுசார் பங்குதார அமைப்பாக உள்ளது.