TNPSC Thervupettagam

ஸ்வச் வாயு சர்வேக்சன் விருதுகள்

September 14 , 2025 27 days 70 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது ஸ்வச் வாயு சர்வேக்சன் விருதுகள் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஈரநில நகரங்கள் அங்கீகார விழாவினை நடத்தியது.
  • தேசியத் தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், மூன்று மக்கள் தொகை அடிப்படையிலான பிரிவுகளில் தூய்மையான காற்று முன்னெடுப்புகளுக்காக 11 நகரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன என்ற நிலையில் இதில் இந்தூர், ஜபல்பூர், ஆக்ரா மற்றும் சூரத் ஆகியவை முதல் வகையில் முன்னணியில் உள்ளன.
  • இந்தூர் 200/200 மதிப்பெண் பெற்று 1.5 கோடி ரூபாய் பெற்றது; அமராவதி இரண்டாம் வகையில் முதலிடத்தையும், தேவாஸ் மூன்றாம் வகையில் முன்னிலையையும் வகித்தது.
  • இந்தூர் மற்றும் உதய்பூர் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் ஈரநில நகர அங்கீகாரத்தைப் பெற்றன என்பதோடு இது 91 ராம்சர் தளங்களுடன் இந்தியாவை ஆசிய அளவில் முன்னணியில் வைத்தது.
  • அரசாங்கம் வார்டு அளவிலான கணக்கெடுப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் தொகுப்பினை வெளியிட்டதோடு மேலும் 75 கோடி மரங்களை நட்டு 75 நகர்ப்புறக் காடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • PRANA போன்ற எண்ணிமத் தளங்கள் இதன் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகின்றன என்பதோடு மேலும் Mission LiFE மற்றும் Amrit Sarovar ஆகியவை நிலையான நீர் மற்றும் வாழ்க்கை முறை முன்னெடுப்புகளை ஆதரிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்