வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகமானது, சுவச் ஷெஹர் ஜோதி முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியது.
நகர்ப்புற சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையில் சிறந்த நடைமுறைகளைப் பிரதிபலிப்பதற்காக 72 வழிகாட்டு நகரங்களை சுமார் 200 வழிகாட்டுதல் நகரங்களுடன் இணைக்கிறது.
நகர்ப்புற சுவச் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த முன்னெடுப்பு ஆனது கட்டமைக்கப் பட்ட 100 நாட்கள் அளவிலான வழிகாட்டுதல் திட்டத்தின் மூலம் ஆதரிக்கப் படுகிறது.
இந்தத் திட்டமானது சுவச் சர்வேக்சன் 2026 கணக்கெடுப்பில் மதிப்பீடு செய்யப்படும், மேலும் இது சக கற்றல் மற்றும் ஒத்துழைப்பு மூலம் நகர அளவிலான மேம்பாடுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.