வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து ஸ்வச்சோத்சவம் (SHS) 2025 பிரச்சாரத்தின் கீழ் ஸ்வச்சோத்சவம் என்ற இருவார அளவிலான நிகழ்ச்சியைத் தொடங்க உள்ளன.
SHS 2025 பிரச்சாரம் ஆனது, தூய்மையான மற்றும் பசுமையான கொண்டாட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகை காலத்துடன் இணைந்தவாறு 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 02 ஆம் தேதி வரை நடைபெறும்.
இது சமூக ஈடுபாடு, கலாச்சாரச் சீரமைப்பு மற்றும் நிலையான சுகாதார விளைவுகளுக்காக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.