சுற்றுலா அமைச்சகம் ஆனது அதன் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தை ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 என புதுப்பித்துள்ளது.
இது பல இடங்களில் நிலையான மற்றும் முறையான உள்கட்டமைப்பை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2014-15 ஆம் ஆண்டில், ஒருங்கிணைந்த முறையில் கருத்துரு அடிப்படையிலான சுற்றுலாத் தளங்களைக் கட்டமைப்பதற்காகத் தொடங்கப்பட்டது.
இது முழுவதுமாக மத்திய அரசின் நிதியுதவியைப் பெறுகின்ற ஒரு திட்டமாக இருப்பதோடு மத்திய மற்றும் மாநில அரசுகளின் இதர பிறத் திட்டங்களுடன் இதனை ஒன்றிணைக்க பலமுயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.