பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளின் ஆத்மநிர்பார் நிதி (PM SVANIdhi) திட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, ‘ஸ்வநிதி மஹோத்சவம்’ ஆனது தொடங்கப் பட்டது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 75 நகரங்களில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு, பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள், எண்ணிமப் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் கடன் வழங்கீட்டு முகாம்கள் ஆகியவை நடத்தப் படும்.
இதில் புகழ்பெற்றத் தெருவோர வியாபாரிகளைப் பாராட்டுவதற்கான நிகழ்வுகளும் அடங்கும்.