TNPSC Thervupettagam

ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான்

September 23 , 2025 3 days 41 0
  • ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான் (SNSPA) என்பது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (MoWCD) ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பாகும்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே சுகாதார நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பைக் குறைப்பதை இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • SNSPA ஆனது, சிறப்பு மருத்துவச் சேவைகள் மற்றும் இலக்கு சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதன் மூலம், வசதி குறைந்த கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்துகிறது.
  • இந்தப் பிரச்சாரத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடத்தப்படும்.
  • இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காசநோய் மற்றும் அரிவாள் வடிவ நோய் உள்ளிட்ட பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு SNSPA விரிவான பரிசோதனைகளை வழங்குகிறது.
  • பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு விகிதங்களைக் குறைப்பதற்கான நோய்த்தடுப்பு மற்றும் ஊட்டச்சத்துத் திட்டங்களை இந்த முன்னெடுப்பு ஆதரிக்கிறது.
  • வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக இந்தப் பிரச்சாரத்தின் நிகழ்நேர கண்காணிப்பு SASHAKT வலை தளம் மூலம் மேற்கொள்ளப் படுகிறது.
  • காசநோய் ஒழிப்பு மற்றும் சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் உதவும் நிக்சய் மித்ராஸ் மூலம் சமூகப் பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகிறது.
  • SNSPA, மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு பரிசோதனைகள், ஆலோசனை வழங்குதல் மற்றும் தாய் மற்றும் குழந்தைப் பாதுகாப்பு (MCP) அட்டைகளை விநியோகிப்பதன் மூலம் குடும்ப நல்வாழ்வை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்