ஸ்வீடன் நிறுவனம் சாப் உடனான BEL-ன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of understanding - MoU)
July 21 , 2018 2500 days 794 0
L - அலை முப்பரிமாண வான்வெளி கண்காணிப்பு ரேடாரினை (RAWL-03) சாப் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக விற்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு மின்னணு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL - Bharat Electronics ltd) கையெழுத்திட்டுள்ளது.
வான்வெளி கண்காணிப்பு ரேடார் RAWL-03 என்பது நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.
RAWL-03 வான் மற்றும் மேற்பரப்பு இலக்குகளை முன்கூட்டியே கண்டறிதலுக்கான மற்றும் கண்காணிப்பதற்கான நீண்ட வரம்பெல்லையைக் கொண்ட வான்வெளி கண்காணிப்பு ரேடார் ஆகும்.
கடல் மற்றும் நிலம் சார்ந்த கட்டமைப்புகளிலும் இதனைப் பொருத்த முடியும். இந்த அமைப்பு GaN TR தொகுதி தொழில்நுட்ப கலையின் அடிப்படையில் அமைந்ததாகும்.
BEL என்பது அரசுக்கு சொந்தமான முன்னணி பாதுகாப்பு மின்னணு நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள 9 பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும்.
இது நவரத்தின தகுதிநிலையினைப் பெற்றுள்ளது. இதன் தலைமையிடம் கர்நாடகாவிலுள்ள பெங்களூருவில் அமைந்துள்ளது.