ஹத்கர்கா சம்வர்தான் சகாயத்தா திட்டம் ( Hathkargha Samvardhan Sahayata)
August 7 , 2017 2824 days 1180 0
கைத்தறி நெசவாளர்களின் வருமானத்தை அதிகப்படுத்தும் வகையிலான திட்டத்தினை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் செயல்படுத்தி உள்ளது.
கைத்தறி நெசவாளர்கள் தங்களது நூல் தறிக்கும் கருவிகளின் உபகரணத் தேவைகளை ஈடு செய்யும் விதத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நெசவாளர்கள் புதிய தறிக் கருவிகள் வாங்கத் தேவையான செலவில் 90 சதவீதத்தினை மத்திய அரசே பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதனால் நெசவாளர்களுக்கான பெரும் நிதிச்சுமை நீங்குகிறது.