TNPSC Thervupettagam

ஹப்-அண்ட்-ஸ்போக் விமானப் போக்குவரத்து மாதிரி

July 1 , 2026 2 days 67 0
  • 2 மற்றும் 3-ஆம் நிலை நகரங்களிலிருந்து சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா 2026 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று ஹப்-அண்ட்-ஸ்போக் (Hub-and-Spoke) விமானப் போக்குவரத்து மாதிரியை அறிமுகப்படுத்தியது.
  • ஏர் இந்தியா ஈஸி கனெக்ட் திட்டத்தின் கீழ் புது தில்லி வழியாக சர்வதேச இடங்களுக்கு பயணிகளை இணைக்கும் முதல் சேவை வாரணாசியில் இருந்து தொடங்கியது.
  • இந்த மாதிரியின் கீழ், பயணிகள் ஒரு முக்கிய மைய விமான நிலையம் வழியாகச் செல்வதற்கு முன்பு புறப்படும் விமான நிலையத்திலேயே குடிவரவு/குடியேற்றம் மற்றும் பயணப் பொருட்கள் தொடர்பான நடைமுறைகளை முடித்துக்கொள்வார்கள்.
  • அடையாளம் காணப்பட்ட மைய விமான நிலையங்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகும் என்பதோடு இந்த வலையமைப்பு நாக்பூர் உட்பட 30 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு விமான நிலையங்கள் மூலம் சர்வதேச இணைப்பை மேம்படுத்துவதன் வாயிலாக 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்