ஜல் சக்தி அமைச்சகம் ஆனது 2025 ஆம் ஆண்டு உலக கழிப்பறை தினத்தன்று (நவம்பர் 19) ஹமாரா சௌச்சலயா, ஹமாரா பவிஷ்ய பிரச்சாரத்தைத் தொடங்கியது.
கிராமப் பஞ்சாயத்துகள் முழுவதும் கிராமப்புறப் கழிப்பறைகளை மேம்படுத்தச் செய்வதையும் அவற்றின் பராமரிப்பை மேம்படுத்துவதையும் இந்தப் பிரச்சாரமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சமூக சுகாதார வளாகங்கள் மற்றும் தனி நபர் வீட்டுக் கழிப்பறைகளைச் சரி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
இதில் வண்ணம் தீட்டுதல், சுத்தம் செய்தல் மற்றும் கிராமப்புறக் கழிப்பறை வசதிகளை அழகுபடுத்துதல் ஆகியவை அடங்கும்.