TNPSC Thervupettagam

ஹமாஸ் காசா அரசாங்கம் கலைப்பு

July 14 , 2026 15 days 65 0
  • சற்றேறத்தாழ இரண்டு தசாப்த கால நிர்வாகத்திற்குப் பிறகு, தனது காசா அரசாங்கத்தைக் கலைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளதுடன் அதன் அதிகாரத்தை காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிடம் (NCAG) மாற்றியுள்ளது.
  • NCAG என்பது அமெரிக்க ஆதரவு அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 2803-இன் கீழ் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உருவாக்கப் பட்ட பாலஸ்தீனிய தொழில்நுட்ப இடைக்கால அமைப்பாகும்.
  • ஒருங்கிணைந்த பாதுகாப்புக் கட்டமைப்பின் மூலம் சுகாதாரம், கல்வி, நீர் சேவைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட சிவில் விவகாரங்களை NCAG நிர்வகிக்கும்.
  • தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை அரசு ஊழியர்கள் தொடர்ந்து NCAG-இன் கீழ் செயல்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது, ஆனால் இந்த நடவடிக்கை ஆனது ஹமாஸின் ஆயுதக் குறைப்பு பற்றி வெளிப்படையாகக் குறிப்பிட வில்லை.
  • பாதுகாப்பு கட்டுப்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த ஆட்சி மாற்றம் காசாவின் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதையும் போர்நிறுத்தக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்