மத்திய அரசானது, சமீபத்தில் ‘ஹரித் சாகர்’ எனப்படும் 2023 ஆம் ஆண்டு பசுமைத் துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது.
இது இந்தியத் துறைமுகங்களின் சுற்றுச்சூழல் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் கடல்சார் துறையின் நிலையான மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்குமான ஒரு விரிவான வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும்.
சுழியக் கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற்கான பெரிய இலக்கை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.