ஹரியானாவில் முறைப்படுத்தப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்தும் மசோதா, 2019
August 9 , 2019 2280 days 700 0
ஹரியானா சட்ட சபையானது ஹரியானாவின் முறைப்படுத்தப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்தும் மசோதா, 2019 என்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது குற்றவியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் முறைப்படுத்தப்பட்ட குற்றக் குழுவினால் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குற்றங்களைத் தடுப்பதற்கு கம்பிவழி, மின்னணு அல்லது வாய்மொழியாக மேற்கொள்ளப்படும் தகவல் தொடர்புகளை இடைமறிக்கும் அதிகாரங்களை மாநில அரசிற்கு வழங்குகின்றது.