ஹவானா குறைபாட்டு நோய் என்று குறிப்பிடப்படும் ஒரு மர்ம நோய் வியட்நாமின் ஹானோய் என்னுமிடத்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
ஹவானா குறைபாட்டு நோயானது 2016 ஆம் ஆண்டில் கியூபாவில் தங்கியிருந்த அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடையே முதன்முதலில் கண்டு பிடிக்கப் பட்டது.
ஹவானாவில் தங்கியிருந்த அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை மற்றும் ஊழியர்கள் வித்தியாசமான ஒலிகளைக் கேட்ட பின்பு வித்தியாசமான உடல் உணர்வுகளை உணர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிவித்தனர்.
தேசிய அறிவியல் கல்விக் கழகத்தின் சமீபத்திய அறிக்கையில் “குறிப்பிட்ட” நுண்ணலை கதிர் வீச்சு தான் இதற்கான ஒரு நம்பத் தகுந்த காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.