லடாக்கின் ஹான்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வகத்தில் 4வது ஹான்லே இருண்ட வானக் காப்பக (HDSR) நட்சத்திர விழா நடைபெற்றது.
இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA), லடாக் வனவிலங்கு பாதுகாப்புத் துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) ஆகியவை இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
ஒளி மாசுபாட்டைக் குறைக்கவும், வானியல் ஆராய்ச்சியை ஆதரிக்கவும் மற்றும் வானியல் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த இருண்ட வானக் காப்பகம் (HDSR) 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும் 3.7 மீட்டர் மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் சந்திரா தொலைநோக்கி மற்றும் 13.7 மீட்டர் தேசிய பெரிய ஒளியியல்-அகச்சிவப்பு தொலைநோக்கி (NLT) ஆகியவற்றை ஹான்லேயில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.