TNPSC Thervupettagam

ஹான்ஸ் தீவு & நரேஸ் ஜலசந்தி

June 21 , 2022 1132 days 498 0
  • ஹான்ஸ் தீவின் மீதான 50 ஆண்டுகாலப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர டென்மார்க்கும் கனடாவும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன.
  • இது ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தரிசுத் தீவாகும்.
  • இது நரேஸ் ஜலசந்தியில் உள்ள கென்னடி கால்வாயின் மையத்தில் கனடா மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
  • வாஷிங்டன் லேண்ட் கடற்கரையில் உள்ள கென்னடி கால்வாயில் உள்ள மூன்று தீவுகளில் இது மிகச் சிறியதாகும்.
  • நரேஸ் ஜலசந்தி என்பது எல்லெஸ்மியர் தீவுக்கும் கிரீன்லாந்திற்கும் இடையே உள்ள ஒரு நீர்வழியாகும்.
  • இது அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பாஃபின் விரிகுடாவின் வடக்குப் பகுதியை ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள லிங்கன் கடலுடன் இணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்