TNPSC Thervupettagam

ஹால்மார்க் தர நெறிகள்

April 17 , 2021 1491 days 595 0
  • 2021 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் தங்கத்திலான கலைப்பொருட்கள் மற்றும் தங்க நகைகளைக் கட்டாயமாக தர அடையாளப் படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது, தங்கத்தின் தரத்தைக் குறிப்பிடுவது நாட்டில் தன்னார்வமாக உள்ளது.
  • தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்குத் தங்க ஹால்மார்க்கிங் (தரக்குறியீடு) ஆனது தூய்மைச் சான்றிதழை வழங்குகிறது.
  • இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ் மூன்று தர நகைகள் மட்டுமே இப்போது குறிக்கப் படுகின்றன.
  • அவை 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் ஆகும்.
  • முன்னதாக, பத்து வகையிலான தரங்களில் தங்க நகைகள் ஹால்மார்க் செய்யப் பட்டன.
  • புதிதாகக் கொண்டு வரப்படும்  தங்கத்திற்கான ஹால்மார்க் தரக்குறியீடானது நான்கு குறியீடுகளைக் கொண்டிருக்கும்.
  • அவை தூய்மை (காரட்டில்), பிஐஎஸ் குறியீடு, மதிப்பீட்டு மையத்தின் பெயர் மற்றும் நகைக்கடைக்காரரின் அடையாளக் குறியீடு என்பதாகும்.
  • இந்தியத் தர நிர்ணயச் சட்டம், 2016 என்ற சட்டமானது இந்தியாவில் தங்க ஹால்மார்க்கிங் முறையைக் கட்டாயமாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்