சி.எஸ்.ஐ.ஆர்-இமாலய உயிரிமூலங்கள் பயிற்சி நிறுவனம் (பாலம்பூர்) என்ற ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்திய இமயமலைப் பகுதியில் ஹீங்கை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லாஹூல் பள்ளத்தாக்கிலுள்ள இமாச்சலப் பிரதேசத்தின் குவாரிங் கிராமத்தில் இதன் முதல் செடி சமீபத்தில் நடப்பட்டது.
அசாஃபோடிடா (Asafoetida) அல்லது ஹீங் செடியானது ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் வளரும் ஒரு தாவரமாகும்.
ஹீங் ஆனது இந்தியாவில் பயிரிடப் படுவதில்லை.
ஹீங் தற்போது உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இது இந்தியாவில் மிகவும் பிரபலமானது. மேலும் இது இந்தியாவில் சமையலில் பயன்படுத்தப் படுகிறது.