TNPSC Thervupettagam

ஹீருன் உலக செல்வந்தர்கள் பட்டியல் 2021

March 6 , 2021 1533 days 693 0
  • இது உலகில் உள்ள அமெரிக்க டாலர் செல்வந்தர்களின் தரவரிசையாகும்.
  • இந்தத் தரவரிசையின் 10வது ஆண்டு வெளியீடு இதுவாகும்.
  • முதன்முறையாக உலகில் செல்வம் மிக்க நபராக டெஸ்லாவின் எலோன் மஸ்க் இடம் பிடித்துள்ளார்.
  • இதில் உலக அளவில் அமேசான்.காம் நிருவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் மற்றும் எல்விஎம்எச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்டு அர்னால்டு ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
  • நாடுகளின் அடிப்படையில் சீனாவானது 1058 என்ற அளவில் அதிக செல்வந்தர்களுடன் முதல் இடத்திலும் இதற்கு அடுத்து அமெரிக்கா (696), இந்தியா (177), ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை 100ற்கும் அதிகமான செல்வந்தர்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் இடம் பிடித்துள்ளன.
  • கண்டங்களின் அடிப்படையில், ஆசியாவானது 51% என்ற அளவில் செல்வந்தர்களைக் கொண்டு உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்த உலகமானது 2020 ஆம் ஆண்டில் ஒரு வாரத்தில் 8 செல்வந்தர்களையும் ஒரு ஆண்டில் 421 செல்வந்தர்களையும் சேர்த்துள்ளது, இதன் மூலம் செல்வந்தர்களின் மொத்த எண்ணிக்கை 3288 ஆக உள்ளது.
  • ஹீருன் உலக செல்வந்தர்கள் பட்டியல் 2021 ஆனது 2402 நிறுவனங்கள் மற்றும் 68 நாடுகளைச் சேர்ந்த 3208 செல்வந்தர்களைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்