ஹீருன் சுயமாக முன்னேறிய உலகின் மிகப்பெரிய செல்வந்தப் பெண்மணிகள் - 2022
April 6 , 2022 1221 days 489 0
பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார்-ஷா, நைக்கா நிறுவனத்தின் ஃபல்குனி நாயர் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் ராதா வேம்பு ஆகியோர் 2022 ஆம் ஆண்டின் ஹீருன் சுயமாக முன்னேறிய உலகின் மிகப்பெரிய செல்வம் மிக்க பெண்மணிகள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சீனாவின் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த வூ யஜீன் என்ற ஒரு சொத்து மேம்பாட்டு நிபுணர் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இவரின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலராகும்.
நைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான ஃபல்குனி நாயர் 7.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் 10 இடங்களில் இடம் பெற்று உள்ளார்.
ராதா வேம்பு 3.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 2வது சுயமாக முன்னேறிய செல்வம் மிக்க பெண்மணியாகத் திகழ்கிறார்.
ஹீருண் பட்டியலில் இவர் 25வது இடத்தில் உள்ளார்.
பயோகான் பயோலாஜிக்ஸ் மற்றும் பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான கிரண் மஜூம்தார்-ஷா 3.8 பில்லியன் டாலர் என்ற அளவிலான சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 26வது இடத்தில் உள்ளார்.